இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது வழங்கினார்கள் .
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழாவையொட்டி இராணிப்பேட்டை மாவட்டம் 2019 -2020 ஆண்டு பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களுக்கு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் பரிசு தொகை 10,000 ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்ஷினி இ.ஆ.ப. வழங்கினார்கள் . இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2019 - 2020 கல்வி ஆண்டில் சிறப்பான முறையில் பணியாற்றிய ஆசிரியர்களான அரசு உயர்நிலைப்பள்ளி சூரை, தலைமை ஆசிரியர் அ.கோ.ரவிச்சந்திரன், சிப்காட் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.டீக்காராமன், சிறுமலர் மடம் நிதியுதவி தொடக்கப்பப் பள்ளி இடைநிலை ஆசிரியை திருமதி.ஹெலன் மேரி ஆகியோருக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையை ஆகியவற்றை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப. வழங்கி கௌரவித்தார்கள்.
மேலும் இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் 2019 -2020 கல்வி ஆண்டில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான கற்றல் வளங்களை 291 காணொளி பாடங்களாக மாற்றியது மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடங்களில் கல்வி தொலைக்காட்சிக்காக 6 பாடத்திற்கு ஒலி ஒளி பாடங்களை தயார் செய்து மாநில அளவில் முதல் இடம் பிடித்த ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் டாக்டர் .ஆர். அன்பழகன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச.திவ்யதர்ஷினி வழங்கி கெளரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ம. ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா. மதன்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ஜி. அருளரசு தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...







கருத்துகள் இல்லை