Header Ads

  • சற்று முன்

    திருவாடானை பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்காவிட்டால் போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு

    "திருவாடானைய 47 ஆயிரம் ஹெக்டே பரப்பளவில் நெல் விவசாயம் செய்யட் பட்டு வருகிறது கடந்த 2017 - 18 ம்வருடம் முதல் விவசாயிகளுக்கு பயிற் சாப்பிட்டு தொகை பெற்று வருகின்ற நிலையில் ஏராளமான விவசாயிகளுக்கு விடுபட்டு அட்டது. அதே போல் 2019.20க்கும் பயிர்காப்பிடு வழங்கட் படாமல் காலம் தாழ்த்தி வருகிறது. 

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது இன்னும் வரவேண்டிய நிலுவை தொகை உள்ளது என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து பயிர் காப்பீடு வழங்கும் இன்சூரன்ஸ் கம்பெனி அனுகிய போது ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானைக்கு வழங்கிய தொகை அனைத்தும் வழங்கப்பட்டதாகவும் நிலுவைத் தொகை எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் வேண்டுமென்றே திருவாடானை பகுதிகளில் பயிர் காப்பீடு தொகை வழங்காமல் காலம் கழித்து வருவதாக குற்றம்சாட்டினார். இன்னும்  ஒரு வார காலத்திற்குள் பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை  விடுபட்ட விவசாயிகளுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தினால்  47 ஊராட்சி தலைவர்கள் மற்றும் அதன் விவசாய பொது மக்களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப் போவதாக ஊராட்சியில் தலைவர்கள் கூட்டமைப்பு  தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான புகார் மனுவினை  இன்று திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்கள்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad