அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரி பிரதமருக்கு தபால் அனுப்பிய காங்கிரஸ் கட்சியினர்.
அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜோஷ்வா தலைமையில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் தொழிலாளர்கள் குறித்து கணக்கீடு செய்து, அனைவருக்கும் நிவாரண நிதி வழங்க வலிறுத்தி பிரதமருக்கு தபால் அனுப்பிவைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார் தமிழ்நாடு அமைப்புசாரா காங்கிரஸ் மாநில தலைவர் மகேஸ்வரன் ஸ்ரீ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார.; இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருளாளர் கேசவன், முன்னாள் மாவட்ட தலைவர் காமராஜ், காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு மாநில துணைத்தலைவர் மாரிமுத்து, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் திருப்பதி ராஜா, பட்டதாரிகள் பிரிவு மாவட்ட தலைவர் அருண்பாண்டியன் , ஐ.என்.டி.யூ.சி மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார் ,உமாசங்கர்.நகர துணை தலைவர் பிச்சைக்கனி, எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாவட்ட தலைவர் கனகராஜ், பி.எஸ்.என்.எல் துரைராஜ், சேவதள நிர்வாகி சக்தி, எஸ்.சி.எஸ்.டி பிரிவு முன்னாள் மாவட்டதலைவர் சின்னப்பன், சுரேஷ் பாண்டியன், சக்தி ஒருங்கிணைப்பாளர் பிரபாகர், மாரியப்பன், கோகுல், விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் அமைப்பு சாரா தலைவர் மல்லிஸ், மாணவர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சின்னத்தம்பி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை