இந்திய நாணயங்களில் தமிழ் மொழியில் கையொப்பம் இடம் பெற்ற முதல் நாணயம் பேரறிஞர் அண்ணா நினைவு நாணயம்
குடியரசு இந்தியா வெளியிட்ட நாணயங்களில் தமிழ் மொழியில் கையொப்பமிட்டு வெளிப்புறம் பேரறிஞர் அண்ணா நினைவு நாணயம் ஆகும்.அண்ணா நூற்றாண்டு பிறந்த ஆண்டை நினைவு கூறும் வகையில் பேரறிஞர் அண்ணா உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயங்களை இந்திய அரசு வெளியிட்டது.
அண்ணா நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட அவரது உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் வெளியிட்டது.
இந்த நாணயத்தின் விட்டம் 23 மி.மீ. இருக்கும். விளிம்பு பற்களின் எண்ணிக்கை 100 இருக்கும். இதில் செப்பு 75 சதவீதமும், துத்தநாகம் 20 சதவீதமும், நிக்கல் 5 சதவீதமும் சேர்க்கப்பட்டுள்ளது. முன்புறம் அசோக தூணின் சிங்க முகமும், அதற்கு கீழ் சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
இடது மேற்புறத்தில் பாரத் என்று இந்தியிலும், வலது மேல் புறத்தில் இந்தியா என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். நாணயத்தின் சிங்கமுக பகுதியின் கீழ் புறத்தின் இடது பக்கத்தில் ரூபியா என்று இந்தியிலும், கீழ் புறத்தின் வலது பக்கத்தில் ரூபாய் என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
பின் புறத்தின் மைய பகுதியில் அண்ணா உருவமும், பேரறிஞர் அண்ணா என்றும் பொறிக்கப்பட்டிருக்கும். இடது புறத்தில் இந்தியிலும், வலது புறத்தில் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். காலம் 1909-1969 என்பது கீழே குறிக்கப்பட்டிருக்கும். மற்றும் அவரின் தமிழ் மொழியில் கையொப்பமும் குறிக்கப்பட்டிருக்கும். இந்திய அரசு வெளியிட்ட நாணயங்களில் தமிழ் மொழியில் கையெழுத்து இடம் பெற்றது பேரறிஞர் அண்ணா நினைவார்த்த நாணயம் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
கருத்துகள் இல்லை