• சற்று முன்

    இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி போராட்டம்

     

    இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் தேசிய விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழுவினர்  ஈடுபட்டனர்.அப்போதைய திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்துடன் இணைந்த இளையரசனேந்தல் குறுவட்டத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்துடன் 2008ஆம் ஆண்டு இணைத்தனர். அதையடுத்து, ஒவ்வொரு துறையும் படிப்படியாக தூத்துக்குடி மாவட்ட எல்கைக்கு உள்பட்டதாகவே கொண்டு வரப்பட்டது.இந்நிலையில், இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட கிராமங்கள் அனைத்தும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலேயே தற்போது வரை நீடித்து வருகிறது. இதையடுத்து, இளையரசனேந்தல் குறுவட்டத்தில் உள்ள ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வலியுறுத்தி அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இந்நிலையில், தற்போது நெல்லை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட நிலையில், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம், தென்காசி மாவட்ட கட்டுப்பாட்டிற்குள் இருந்து வருகிறது. எனவே, இளையரசனேந்தல் குறுவட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி எல்கைக்குள் கொண்டுவர வேண்டும்,. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழுவினர் கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு  திரண்டு, முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

    இந்தப் போராட்டத்துக்கு இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழுத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ரெங்கநாயகலு முன்னிலை வகித்தார். இதில் திரளானோர் கலந்து கொண்டு, முதல்வருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினர். பின்னர், கோரிக்கை நிறைவேற வேண்டி தபால் பெட்டி முன்பு தேங்காய் விடலை செய்தனர்.இதில், தேசிய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுசெயலர் பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad