தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ராசு தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் திட்டமான பிரதமர் கிசான் உதவித் திட்டத்தில் மோசடி நடைபெற்றது என்றும்,. அதை கண்டறிய சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும், உரிய நடவடிக்கை எடுத்து இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து அவர்களுக்கு உதவி வழங்கப்படவில்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதமர் கிசான் உதவித் திட்டத்தின் நடைபெற்ற ஊழல்களை கண்டுபிடிக்க ஏதுவாக சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என கோரி க்கை வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 






கருத்துகள் இல்லை