Header Ads

  • சற்று முன்

    மலை கிராமங்களுக்கு சாலை மற்றும் பஸ் வசதி! கலெக்டர் சண்முகசுந்தரம் உறுதி

    வேலூர் மாவட்டம்,  பேர்ணாம்பட்டு வட்டம், பரவக்கல் ஊராட்சி பு.எண்.194-ல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அமைத்திட இடங்களையும், டி.டி.மோட்டூர் கிராமத்தில் பு.எண்.382-ல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம்.ஆ.ப.அவர்கள் ஆய்வு செய்தார்.

    பரவக்கல் மற்றும் டி.டி.மோட்டூபி கிராமத்தில் கால்நடைத்துறைக்கு சொந்தமான இடங்களில் மேற்படி கட்டிடம் கட்டும் இடத்திற்கு பதிலாக கால்நடைத்துறைக்கு வேறு அரசு நிலம் மாறுதல் செய்து வழங்கும் நோக்கில்  பேர்ணாம்பட்டு வட்டம் அரவட்லா கிராமத்தில் பு.எண்.233-ல் மாற்று நிலம் வழங்க அரசு நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அரவட்லா கால்நடை மருத்துவமனையில் மருந்து இருப்பு, கால்நடைகளுக்கு வழங்கப்படும் செயற்கை முறை கருவூட்டல் குறித்தும், ஊரகப் புறக்கடை கோழி வழங்கப்பட்ட விவரங்கள் குறித்த கோப்புகளை ஆய்வு செய்து, கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும், அந்த மலைப் பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு ஆண்டு தோறும் செலுத்தப்படும் தடுப்பு+சிகள் குறித்தும் கேட்டறிந்தார். 

    மலைப் பகுதி கிராம மக்களிடம் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, பள்ளி மாணவர்களுக்கு  போக்குவரத்து வசதி மற்றும் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு பசுமை வீடு கட்டிக் கொடுப்பது குறித்தும் கேட்டறிந்தார். மலை கிராம மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    குடியாத்தம் தாலுக்கா - கொண்ட சமுத்திரம் காந்திநகர் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம், கணினி அறை, விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதிகளுடன் வேறு இடத்தில் கட்டுவதற்காக இட்ங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு கே.வி.குப்பம் வருவாய் அலுவலர் வளாகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார வளாகம் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது கால்நடை இணை இயக்குநர் மரு.நவநீதகிருஷ்ணன,; உதவி இயக்குநர் மரு.அந்துவன், வட்டாட்சியர்கள் முருகன். வத்சலா,சரவணமுத்து, சர்கரை ஆலை இயக்குநர்  கே.எம்.ஐ.சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், வாசுதேவன், பாரி, ஹேமலதா மற்றும் குடிசை மாற்று வாரிய அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், வருவாய்துறை அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad