ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் தரிசனம் - முறையான பாதுகாப்பு வழிமுறைகளின் படி பக்தர்களுக்கு அனுமதி
தென்மாவட்டத்திலே பிரசித்திபெற்ற பழைமை வாய்ந்த கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் தரிசனம் - முறையான பாதுகாப்பு வழிமுறைகளின் படி பக்தர்களுக்கு அனுமதி
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.ஐந்து மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் வழிபாட்டுத் தளங்கள் அனைத்தும் திறக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவிலில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி கை கழுவும் இடம் ஆகியவை அமைத்து பக்தர்கள் வருகை குறித்து முன்னேற்பாடுகள் செய்யபட்டுள்ளன. இதையடுத்து இன்று கோவில் திறக்கபட்டு காலை பக்தரகள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும்,பின்னர் வெப்ப பரிசோதனை,சானிடைஸர் பயன்படுத்திய பின்னரே கோவில் உள்ளே அனுமதிக்கபட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் கோவிலில் தேங்காய் உடைப்பதை பக்தரகள் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தையடுத்து,கோவில் வளாகத்தில் உள்ள தோங்காய்,பழம் மற்றும் பூ கடைகளின் விற்பனை செய்வதையும் தடுக்கபட்டுள்ளது.தேங்காய் உடைப்பதற்கு அனுமதி கிடையாது.
கருத்துகள் இல்லை