• சற்று முன்

    கோவில்பட்டி அருகே திமுக அலுவலக கட்டடப்பணி அடிக்கல் நாட்டு விழா

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் திமுக கிளை அலுவலக கட்டடப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அலுவலக கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசுகையில், 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் உள்ளது. இதில், ஜெயலலிதா மறைந்த பின்னர் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை. அனைவரும் அவர்களது வீட்டு கஜானவை நிரப்புவதற்கான வேலை நடக்கிறது. இந்த தொகுதியை சேர்ந்த அமைச்சர் 5 ஆண்டுகளாக தொகுதிக்கு ஒன்று செய்யவில்லை. இப்போது அணைய போகிற விளக்கு மின்னுவது போல் ஊர் ஊராக சுற்றுகிறார். இவர்கள் 5 ஆண்டுகள் எங்கு போயிருந்தார்கள் என்று மக்களுக்கு தெரியும். மக்களை சந்தித்தீர்களா, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றினீர்களா. அவரது தொகுதியில் இன்னும் தண்ணீர் வசதி கூட செய்து தரவில்லை, என்றார்.

    விழாவில், பொதுக்குழு உறுப்பினர் என்.ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பொன்னுத்துரை, சுந்தரேஸ்வரி, அசோக்குமார் பாரதி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் கணேசன், தாமோதரகண்ணன், செல்வமணிகண்டன், பாண்டவர்மங்கலம் கிளை செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை  தொழிலதிபர் சுபாஷ் பில்டர்ஸ் சண்முகராஜ் செய்திருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad