கோவில்பட்டி அருகே குமாரபுரம் காட்டுப் பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவில்பட்டி அருகே குமாரபுரம் காட்டுப் பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வனச்சரக அலுவலர் சிவராம் வனவர் நாகராஜ், ஆனந்த் மற்றும் வன பாதுகாப்பு பணியாளர்கள் கோவில்பட்டி குருமலை கயத்தாறு வனப்பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது குமாரபுரம் ரயில்வே கேட் பகுதி யில் முயல் வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மந்தித்தோப்பை சேர்ந்த செல்வம் மகன் கண்ணன் (23), விஜயன் மகன் ரமேஷ்(22), குட்டி மகன் அப்பு(18) ஆகிய மூன்று பேர் வனத்துறையினரை கண்டதும் காட்டுப்பகுதி வழியாக தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்று சுற்றி வளைத்த வனத்துறையினர் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து முயல் வேட்டைக்கு பயன்படுத்தக்கூடிய மைக்ரோ மின்மோட்டார் கருவிகள், டார்ச்லைட் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மூன்று பேருக்கும் தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதுகுறித்து கோவில்பட்டிவனச்சரக அலுவலர் சிவராம் கூறுகையில் கோவில்பட்டி வனச்சரக பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இது தொடர்பாக 9789183034 , 8682 957177, 8870668682 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை