கோவில்பட்டி காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்துள்ள புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் உடனடி தீர்வு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமில் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, அனைத்து மகளிர் காவல் நிலையம், கொப்பம்பட்டி, கழுகுமலை, கயத்தாறு ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் முகாம் நடைபெற்றது
முகாமில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன் தலைமையில் ஆய்வாளர்கள் சுதேசன், முத்து, பத்மாவதி, சுகாதேவி, கஸ்தூரி மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள், போலீஸார் கலந்து கொண்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளை மாவட்ட காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் கோபி ஆய்வு செய்தார். இதில், சுமார் 100-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
கருத்துகள் இல்லை