சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்த கழிவு நீர் கால்வாய்கள் கல்வெட்டு சிறுதரைப்பாலம் தூய்மை பணிகள்
சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதியில் மொத்த கழிவு நீர் கால்வாய்கள் கல்வெட்டு சிறுதரைப்பாலம் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சோளிங்கர் பேரூராட்சியில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் நடந்து வருகிறது. செயல் அலுவலர் செண்பகராஜன் உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் வடிவேல் தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர்கள் நடராஜன், முருகன் மேற்பார்வையில் திடக்கழிவு பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் பரப்புரையாளர் உள்ளிட்ட 85-க்கும் மேற்பட்ட பேரூராட்சி ஊழியர்கள் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் பகுதியில் உள்ள கல்வெட்டுகள் கழுநீர் கால்வாய்கள், சிறுதரைபாலம் ஆகியவற்றைக் சுத்தப்படுத்தி வருகிறார்கள்.
மழையின் போது தண்ணீர் தேங்காமல் கால்வாய் வழியாக சென்று வெளியேறும் வகையில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கூடவே கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த மாஸ் தூய்மை பணியின் மூலம் பேரூராட்சி பகுதிகளில் குப்பை மற்றும் கழிவு கால்வாயில் தூர் வரப்பட்ட குப்பைகளை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது இதனால் பெரும்பாலான கால்வாய்கள் சுத்தமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை