Header Ads

  • சற்று முன்

    ராகு,கேது, பெயர்ச்சி 2020 - மகரம் - கும்பம் - மீனம்

     மகரம் 

    மகரம் ராசிக்காரர்களுக்கு ராகு 5ஆம் இடத்திற்கும் கேது லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கும் வருகிறார்கள். 18 ஆண்டுகளுக்கு ஓருமுறை இந்த ஸ்தானங்களில் ராகு கேது சஞ்சரிப்பார்கள். விரைய செலவுகளால் அல்லல் பட்டு வந்தீர்கள். போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். கேது லாப ஸ்தானத்திற்கு வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். கடன் சுமை குறையும் தொழில் விசயங்கள் ஏற்றத்தை தரும். இது வரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும். கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். 11ல் கேது வருவதால் சிலருக்கு மறுமணம் நடக்கும். ராகு கேது பெயர்ச்சி சிலருக்கு ஆறுதலையும் முன்னேற்றத்தையும் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். 18 வருஷத்துக்கு பிறகு 5ஆம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

    கும்பம் 

    கும்பம் ராசிக்காரர்களே ராகு கேந்திர ஸ்தானமான 4ஆம் இடத்திற்கும், கேது 10ஆம் இடத்திற்கும் மாறுகிறார்கள். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் வரும். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும். பிள்ளைகளின் திருமணம் படிப்புக்கு செலவு செய்வீர்கள். கடனுக்கு வட்டி கட்டிய நேரம் மாறி வரவுகள் சேமிப்பாக உயரும். பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் யோகத்தை கொடுக்கும். வசதி வாய்ப்புகள் கூடும் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வு கிடைக்கும்.

    மீனம் 



    மீனம் ராசி நண்பர்களே ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும். "காரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம் என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார். செய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் தீரும். பாக்ய ஸ்தானத்திற்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது வருவதால் இதுவரை தடைபட்டு நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாத்தியம் கிடைக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad