அனிமல் பெர்த் கன்ட்ரோல் கமிட்டி" மூலம் தெரு நாய்களுக்கு கருத்தடை!
வேலூர் அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம் இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.09.2020) துவக்கிவைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:- உலக வெறி நோய் தினம், வெறி நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானி லூயிஸ் பாஸ்கர் அவர்களது நினைவு நாள் ஆண்டு தோறும் செப்டம்பர் 28 ம் தேதி உலக வெறி நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக வெறி நோய் நாளன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு உத்தரவுப்படி நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி இலவசமாக கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக போடப்படுகிறது.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டதில், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் தலா 2000 நாய்கள் வீதம் மொத்தம் 6000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள மருந்தகம் மற்றும் கிளை மருந்தகங்களில் வெறி தடுப்பூசி மருந்து செலுத்தப்படுவதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு வெறி நாய்களால் பொது மக்களுக்கு ஏற்படும் உயிர் சேதம் குறைக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி பணி "அனிமல் பெர்த் கன்ட்ரோல் கமிட்டி" ஏற்படுத்தி மாநகராட்சி அனைத்து நகராட்சி, பேரூராட்சிகள்,) ஊராட்சிகளில் உள்ள நாய்களுக்கு அதனதன் பொறுப்பில் பிராணி நல வாரியம் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் மினரல் மிக்ஸர் இருப்பு அறை மற்றும் மாடு,ஆடுகள், பிராணிகளுக்கு சிகிச்கை அளிக்கும் அறைகளையும், வளாகங்களையும், ஆப்ரேசன் தியேட்டரையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மருத்துவமனைக்கு பொதுமக்கள் அழைத்து வரும் கால்நடைகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் மரு.ஜெ.நவநீதகிருஷ்ணன் மற்றும் உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, மரு.அந்துவன் ஆணையாளர் திரு.சங்கரன்;, நகர சுகாதார அலுவலர் திருமதி.மரு.சித்திரசேனா மிருகவதை தடுப்பு சங்க துணை தலைவரும்,நாராயிணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையை இயக்குநருமான பாலாஜி மற்றும் மற்றொரு மிருகவதை தடுப்பு சங்க துணை தலைவருமான வழக்கறிஞரும், செல்லக்குட்டி அறக்கட்டளை இயக்குநர் திருமதி.அனுஷா செல்வம் மற்றும் பிராணிகள் நல ஆர்வலர்கள், உஜ்ஜி ராஜேஷ், ரமேஷ்குமார், வட்டாட்சியர் திரு.ரமேஷ் மற்றும் கால் நடை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை