Header Ads

  • சற்று முன்

    நெமிலி வட்டார பெண்கள் இணைப்புக் குழு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.....

    ராணிப்பேட்டை மாவட்டம்  அரக்கோணம் வட்டம் மேல் களத்தூர் கிராமத்தில் உள்ள  நெமிலி வட்டார பெண்கள் இணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மேரி தென்றல் இயக்கத்தின் நிறுவனர் Dr.வேதநாயகி தலைமையில் சங்கரி ஜனநாயக மாதர் சங்கம் மஞ்சுளா வாலாஜா வட்டார பெண்கள் இணைப்புக் குழு சங்கரி கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் தமிழ்ச்செல்வி கலஞ்சியம் பெண்கள் விவசாய சங்கம் கௌரி தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு குமார் அருந்ததியர் மக்கள் பேரவை அமைப்புகளின் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்

    அகில இந்திய அளவில் பெண்கள் இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து தீர்வு காணப்படாமல் தேங்கிக் கிடக்கும் மக்கள் பிரச்சினைகளுக்கும் குறிப்பாக பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அவர்களை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு அகில இந்திய அளவில் பிரச்சார இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தில் இந்த பிரச்சார இயக்கம் இரண்டாம் தேதி தொடங்கப்பட்ட 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இந்தப் பின்னணியில் எங்கள் பகுதியில் தீர்க்கப்படாமல் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் பிரச்சனைகளை தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம் தாங்கள் பெண்களின் முன்னுரிமை வழங்கி பிரச்சினைகளை தீர்வு காண வேண்டும் என்றும் தேவைப்பட்டால் தாங்களே மேல் அதிகாரிகளை தொடர்புகொண்டு அவர்களை தீர்த்து வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

    30 கோரிக்கைகள் உணவு பாதுகாப்பு, ஆரோக்கியம் ,கல்வி, பெண் விவசாயிகள்,  இளைஞர்களின் உரிமைகள்,  வங்கி, நுண் நிதி நிறுவனங்கள், பெண் அரசியல் கைதிகள், பெண்களின் அரசியல் பங்கேற்பு, ஜனநாயக உரிமைகள்,  குழந்தைகள் உரிமை, முஸ்லிம் பெண்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், திருநர் சமூகம், பாலியல் தொழிலாளர்கள், தலித் ஆதிவாசி பெண்கள், டாஸ்மார்க், மீனவர்கள், பெண்கள் மீதான வன்முறை, தனி பெண்கள், வீட்டு வேலை பணியாளர்கள், சுற்றுச்சூழல், மாற்றுத்திறனாளி, மீடியா, கட்டிட தொழிலாளர்கள். மேற்கண்ட துறைகளில் நம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள  பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி  தொகுப்பாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர் 


    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad