• சற்று முன்

    கோவில்பட்டியில் கார் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை

    கோவில்பட்டியில் கார் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பசுங்கிளி மகன் கணேசன்(27). கார் ஓட்டுநரான இவர், 7 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இவர், நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு உள்ளே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad