Header Ads

  • சற்று முன்

    ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டங்களில் ஊழல்! நீதிமன்றம் செல்கிறது தி.மு.க! சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் பரபரப்பு பேட்டி...

    வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பணிகளில் மாபெரும் ஊழல்கள் நடந்திருப்பதாக தி.மு.க.குற்றம் சாட்டியிருக்கிறது. பணியை பற்றி தெரியாத குத்தகைதாரரிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களான சி.ஞானசேகரன், ஏ.பி.நந்தகுமார் மற்றும் ப.கார்த்திகேயன் ஆகியோர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

    வேலூர்மாவட்டம்,வேலூரில் திமுக மத்தியமாவட்ட அலுவலகத்தில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது, காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தற்போது வாரத்தில் ஒரு நாள் தான் குடிநீர் வழங்குகிறார்கள் அதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த திட்டத்தில் விடுபட்ட அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க காவேரிகூட்டு குடிநீர் திட்டம் பேஸ் -1 பேஸ் 2 ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

    மேலும் தற்போது இந்த மாவட்டத்தில் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு அடிவரையில் தண்ணீர் கீழே சென்றுவிட்டது. இதனால் மக்கள் பாதிக்கபடுகிறார்கள். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே பல தடுப்பனைகளை கட்டிவிட்டதால், பாலாற்றை நம்பியிருந்த வேலூர்,திருவண்ணாமலை,திருவள்ளூர் ,காஞ்சிபுரம்,சென்னை ஆகிய ஐந்து மாவட்டங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு வருகிறது. .

    மேலும், மோர்தானா அனைக்கு வரும் தண்ணீரையும் தடுத்து நிறுத்தி அனைக்கட்டிவிட்டனர். இதனால் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.  தமிழக அரசு பாலாற்றின் குறுக்கே பல்வேறு தடுப்பனைகளை கட்டுவோம் என  ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு வெறும் அறிவிப்போடு நிற்கிறது. எனவே இதுவரையில் ஒரு தடுப்பனையை கூட தமிழக அரசு கட்டவில்லை இனியாவது பாலாற்றின் குறுக்கே தடுப்பனைகளை அமைக்க வேண்டும்.

    வேலூரில் அம்ரூத் திட்டத்தில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கும் பணிகள்   துவங்கி மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் டேங்கே கட்ட தெரியாத ஒப்பந்ததாரரிடம் பணிகள் கொடுத்ததால் மூன்றாண்டுகளாகியும் பணிகள் அப்படியே கிடக்கிறது.

    இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதே போன்று காங்கேயநல்லூரின் குறுக்கே பாலம் அமைப்பதாக கூறினார்கள் அதுவும் செயல்படுத்தபடவில்லை. வேலூர் காட்பாடி உள்ளிட்ட நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் திணறுகின்றனர் எனவே புறவழிசாலைகளை அமைக்க வேண்டும் வேலூர் பொலிவுறும் (ஸ்மார்ட் சிட்டி) நகரம் திட்டத்தில் ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு எந்த பணிகளும் சரிவர செயல்படவில்லை. அவற்றில் எல்லாவற்றிலும் ஊழல் நடக்கிறது. குப்பையை கூட எரிக்கிறார்கள். கொரோனா பணியிலும் மிகப்பெரிய அளவில்  ஊழல் நடக்கிறது. கிராம பகுதிகளுக்கு தமிழக அரசு அறிவித்த இலவச முகக்கவசங்கள் மக்களை சென்று சேரவில்லை.

    2018 ஆம் ஆண்டு அறிவித்த தென் பென்னை பாலாறு திட்டம் பற்றி தொடர்ந்து அறிவித்து கொண்டே இருக்கிறார்களே தவிர பணிகள் எதுவும் நடக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி, மாநகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் இல்லையென்றால் திமுக நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து ஊழல்களை வெளிகொண்டு வருவோம்.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களை கேட்டுள்ளோம் மக்கள் பிரச்சணைகளுக்காக திமுக விரைவில் போராட்டம் நடத்தும் என்று கூறினர். புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகளை உரிய வகையில் தர ஆய்வு செய்ய வேண்டும் என்றும்,  "வேலூர் மக்கள் குடியுரிமை சங்கம்" என்கிற அமைப்பின் தலைவரான சீனியர் லாயர் பி.எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் தொடர்ந்த ஒரு வழக்கில் ஆறு உள்ளிட்ட நீர் நிலைப்பகுதிகளிலிருந்து ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் தான் தொழிற்சாலை மற்றும் சுற்றுச் சூழலுக்கு எதிராக கருதப்படுபவைகள் கட்ட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

    தற்போது வேலூர் புது பேருந்து நிலையம் பாலாற்றின் கரையிலேயே கட்டப்பட்டு வருவதால் பாலாறு மாசு அடைவது உறுதியாகிறது. எனவே அங்கு பேருந்து நிலையம் அமைப்படுவது என்பது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும் என்று வேலூர் வாழ் மூத்த குடிமக்கள் புலம்புகிறார்கள். 


    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad