திருச்சி விமான நிலையத்தில் டிராலி பணியாளரிடம் பணம் பறிக்கும் ஒப்பந்தக்காரர்
திருச்சி விமான நிலையத்தில் டிராலி தள்ளுவண்டி பணியாளர்கள் பயணிகளிடம் டிப்ஸ் பெற்று ஒப்பந்தக்காரர்க்கு பணம் தரும் அவல நிலை நடைபெற்று வருகிறது . திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் தள்ளுவண்டிகள் மீதான விளம்பர உரிமை மற்றும் பேக்கேஜ் தள்ளுவண்டியை பராமரிப்பதற்காக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
இந்த டெண்டரின் கீழ், விமான நிலைய தள்ளுவண்டிகளில் விளம்பரங்களை வெச்சிட்டு அதில் வரக்கூடிய வருவாயைக் கொண்டு டிராலி பராமரிப்பு மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். தற்பொழுது விமலா என்பவர் ஒப்பந்தங்களை எடுத்துள்ளார்.
விமலா பெயரில் அவரது கணவர் கோவை சுந்தர் செயல்பட்டு வருகிறார். ஒப்பந்தக்காரர் ஏ பணியாளர்களுக்கு பணம் வழங்க வேண்டும் ஆனால் ஒப்பந்தக்காரர் விமலாவின் கணவர் கோவை சுந்தரிடம் ட்ராலி பணியாளர்கள் ரூபாய் 600 கொடுத்தால் தான் பணியிலேயே நீடிக்க முடியும் என்ற அவலநிலை தொடர்கிறது.
இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் தர்மராஜை டிராலி தள்ளும் பணியாளர்கள் நேரில் சந்தித்து மனு அளித்து உள்ளார்கள்.
தொழிலாளர்களுக்கு ஒப்பந்தக்காரர்கள் அரசு விதித்துள்ள சட்டத்திற்கு உட்பட்டு உரிய சம்பளப் பணத்தை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு PF கட்ட வேண்டும் தற்போது நீக்கப்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
கருத்துகள் இல்லை