Header Ads

  • சற்று முன்

    மற்றுமொரு ஸ்டெர்லைட் ஆலை விரைந்து மூட கவுன்சியர் கூட்டத்தில் வேண்டுகோள்

    திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் இன்று ஒன்றிய பெருந்தலைவர் முகமது முத்தார் தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் தண்ணீர் பற்றாக் குறை, மின்சாரம் வாரிய அதிகாரிகள் அலட்சியம், அடிப்படை தேவைகள் இன்னும் பெறாத கிராமங்கள், என பல்வேறு கோரிக்கைகளை சரி செய்ய கவுன்சிலர்கள் கூறினார்கள். 

    ஒன்றிய தலைவர் பேசுகளை தொண்டி, திருவாடானை, மின்வாரியம் செயல்பாடு அதிர்ப்த்தியளிப்பதாகவும், வேளாண்மை துறை அதிகாரிகள் அடுத்த கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டு என்று அதிகாரிகளிடம் முறையிட்டார். மச்சூர்  மற்றொரு கிராமத்தில் கருவாடு அரைக்கும் ஆலை உள்ளது என்றும் அந்த ஆலையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் மேலும் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று அபாயம் உள்ளது என்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விட அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும்மேலும் கிராமச் சாலையில் குறிப்பிட்ட எடைக்கு மேல் செல்லக் கூடாது என்ற விதி இருந்தும் அதையும் மீறி பல டன் எடையுள்ள கன ரக வாகனங்கள் செல்வதாலும் ஏற்கனவே உயர்நீதிமன்றம் இரவு நேரங்களில் சாலையை இயக்கக் கூடாது என்று உத்தரவிட்டும் உத்தரவை மதிக்காத இந்த ஆலை இரவிலும் இயக்கப்படுகிறது. அதிலிருந்து எழும் புகை மக்கள் குடியிருக்கும் வீடுகளில் படிந்து சேதத்தை ஏற்படுத்துவதாக கவுன்சிலர் சிவசங்கீதா தெரிவித்தார் இது குறித்து பேசிய ஊராட்சி மன்ற ஒன்றிய பெருந்தலைவர் முகம்மது முக்தார் இது பற்றிய விவரத்தை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் இதுகுறித்து சிவ சங்கீதா வெளியில் பத்திரிக்கையாளர் கூறுகையில் இந்த ஆலையை உடனடியாக இயக்கத்தை நிறுத்த வேண்டும் இல்லையேல் தொடர் போராட்டம் நடத்தபடும் என்று தெரிவித்தார.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad