தொழில் தொடங்குவதாக 30 கோடி மோசடி: தம்பதி, மகன் கைது
அவனியாபுரம்: மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை அருகே கீழக்குயில்குடியைச் சேர்ந்தவர் புவனேஷ்(55). இவர் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் திருப்பரங்குன்றத்தை அடுத்த நெல்லையப்பபுரம் பகுதியை சேர்ந்த ராஜகுருவிடம் தமிழகம் முழுவதும் உள்ள தனது நிறுவனத்தில் பங்குதாரராக சேர்க்க ரூ.95 லட்சம் பெற்றுள்ளார். பின்னர் புவனேஷ் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மகன் நிச்சயதார்த்தத்துக்காக அவனியாபுரம் வந்த புவனேஷுக்கும் ராஜகுருவுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து ராஜகுரு புகாரின்படி அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் புவனேஷ் சென்னையில் ‘மேகா எண்டர்பிரைஸ்’ என ஏஜென்சி நடத்தி மெடிக்கல் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் டீலராக இருந்துள்ளார். மேலும் மதுரை, திருவண்ணாமலை, கோவை, நெல்லை சேலம் ஆகிய ஊர்களில் 33 பேரிடம் பங்குதாரராக சேர ரூ.30 கோடி வரை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. புவனேஷ் மற்றும் அவரது மனைவி உஷா(50), மகன் கிஷோர்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை