விநாயகர் சதுர்த்தி விழா சார்பாக ஆலோசனைக் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை D2 காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் பாலு தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அருகில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் உதயசூரியன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.என்னவென்றால் செய்தி வெளியீடு எண்: 583 தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை (22.8. 2020) அன்று கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கவும், பொது மக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவது, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ, செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. சிறிய திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்குமாறு பொது மக்களும், திருக்கோவில் நிர்வாகமும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அவ்வாறு வழிப் பாட்டு தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவும் செய்தி வெளியீட்டில் அறிக்கைகள் வந்துள்ள நிலையில் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் காவல் ஆய்வாளர் பாலு அவர்கள் அறிவுரைகளை எடுத்துக்கூறினார். இக்கூட்டத்தில் இந்துமுன்னணி நிர்வாகிகளும் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் மற்றும் பொது மக்களுக்கும் சுமார் 25 நபர்கள் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை