• சற்று முன்

    வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வழங்கிய நலத்திட்டங்கள்


    மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நலத்துறை சார்பாக 30 பயனாளிகளுக்கு ரூபாய் 1 லட்சத்து 45 ஆயிரத்து 816 மதிப்பிலான தையல் இயந்திரம் மற்றும் சலவை பெட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்!

    வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நலத்துறை சார்பாக 15 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம் தலா ரூ.4379 மதிப்பில் என மொத்தம் ரூ.65 ஆயிரத்து 688 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும்,15 பயனாளிகளுக்கு விலையில்லா சலவைப்பெட்டி தலா ரூ.5341 மதிப்பில் மொத்தம் ரூ.80 ஆயிரத்து 128 மதிப்பிலும் என 30 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 816 மதிப்பிலான தையல் இயந்திரம் மற்றும் சலவை பெட்டிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  விஜயராகவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பூர்ணிமா, வருவாய் கோட்டாட்சியர்கள் கணேஷ், ஷேக் மன்சூர், அலுவலக மேலாளர் முரளி, கண்காணிப்பாளர் செல்வி, விஷ்ணுப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.


    எமது செய்தியாளர் : ஆர். ஜே.சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad