வசந்தகுமார் காலமானார் - கொரோனா பாதிப்புக்கு பலியான முதல் எம்.பி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பியும் வசந்த் அன்ட் கோ உரிமையாளருமான வசந்தகுமார் இன்று மாலை காலமானார்.
70 வயதான அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு 10ஆம் தேதி சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.முன்னதாக, கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தமது தொகுதியான கன்னியாகுமரி மாவட்டத்திலும் சென்னையிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த வசந்தகுமார், சமீபகாலமாக சென்னையில் தங்கியிருந்தார். இந்த நிலையில், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், வயது மூப்பு, சக்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் நோயின் வீரியம் அதிகரித்து அவரது நுரையீரல் செயலிழக்கும் நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செயற்கை சுவாச உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வசந்தகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்பாக, அவரது மனைவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வசந்தகுமார் உயிரிழந்த தகவல் கேட்டு மிகவும் துயரம் அடைந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத்,
கருத்துகள் இல்லை