• சற்று முன்

    ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை அருகே காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்



    ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை அருகே காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வேதநாயகி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி விவசாயி அணைக்கரை முத்துவை சித்திரவதை செய்து படுகொலை செய்த வனக் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும் வேலூர் மாவட்டம் ஷாலினி மற்றும் அவரது குழந்தையை சட்ட விரோதமாக கைதுசெய்து சித்திரவதை செய்த காட்பாடி காவலாய் அவர் புகழ் கண்டித்தும் சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைப் படுகொலைக்கு துணைபுரிந்த அரசு மருத்துவர் விணிலா, நீதிமன்ற நடுவர்  சரவணன் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீது குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர் மேலும் இதில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ் நாடாளுமன்ற துனை செயலாளர் சீ.ம.ரமேஷ் கர்ணா, மாவட்ட துனை செயலாளர் சோ.தமிழ்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா வெங்கடேசன், ரமேஷ்  மமக ரஹமான் ஷெரிப் மற்றும் விசிக செஞ்சுடர் பொற்க்கை பாண்டியன், ராஜசேகர்,ஏழமலை திருமா.காளி, சுரேஷ்குமார் செந்தில் ,விக்ரம் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.விசாரம். சசிகுமார்.MA. ராணிப்பேட்டை மாவட்ட செய்தி தொடர்பாளர்.விசிக. 


    செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad