Header Ads

  • சற்று முன்

    நியாய விலை கடையில் தமிழக அரசின் விலையில்லா முக கவசம் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி, அவர்கள் துவக்கி வைத்தார்கள்.



    இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் வட்டம் தக்கோலம் காந்திநகர், தேரடி அருகில் உள்ள கூட்டுறவு துறை நியாய விலை கடையில் தமிழக அரசின் விலையில்லா முக கவசம் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி, அவர்கள் துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி  பேசியதாவது..

    நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ்  பரவலை தடுக்கும் வகையில் ஆறு கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது. தற்போது ஏழாம் கட்டமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் கோவிட்- 19 தொற்றுநோய் பரவாமல் தடுத்திட பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கும், பணியிடங்களுக்கும் செல்லும்போது முககவசம் கட்டாயம் அணிவித்தல் வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் தேதி விலையில்லா முக கவசம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். இத்திட்டம் பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் வீதம் வழங்க உத்தரவிட்டது.


    இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் விலையில்லா முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை  முதற்கட்டமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் 9 பேரூராட்சிகளில் உள்ள ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 705 குடும்ப அட்டைகளுக்கு 7 லட்சத்து 25 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கும் பணியை இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு. ரவி, அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பேபி இந்திரா, ராணிப்பேட்டை மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர் .இளவரசி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



    ஆர்.ஜே.சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad