தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் மற்றும் ஐஜேகே சார்பில்தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் மற்றும் ஐஜேகே சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவடி மிதியூர்கிராமத்தில் காளையார்கோவில் அருகே நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவடி மிதியூர் கிராமத்தில் காளையார்கோவில் அருகே முடுக்கூருணி கிராமத்தில் ராணுவ வீரர் ஸ்டீபன் தாயார் ராஜகுமாரி மற்றும் மனைவி சினேகாவையும் கொலை செய்துவிட்டு நகை பணத்தை திருடிச் சென்ற திருடர்களை இதுவரை கைது செய்யாத நிலையில் கைது செய்யக்கோரி தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் மற்றும் ஐஜேகே சார்பில் அதன் இணை செயலாளர் லீமாரோஸ்மார்ட்டின் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இந்த ஆர்ப்பாட்டத்தில் முடுக்கூரணி இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகளை 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை கைது செய்யாமல் இருப்பது வேதனைக்குரியது என்றும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இனியும் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தும் என்றும் கருதப்படும் என்றும் ஐஜேகே மாநில இணைச்செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் தங்கள் கைகளில் கருப்பு கொடியை ஏந்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்
கருத்துகள் இல்லை