• சற்று முன்

    பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்களால் போக்குவரத்து நெரிசல்


    தர்மபுரி: தர்மபுரி கடைவீதியில், பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தர்மபுரி மாவட்டத்தில், தற்போது நடக்கும் சுப நிகழ்ச்சிகளால், பூஜை பொருட்கள் மற்றும் பூ விற்பனை கடைகளின் அருகே, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தர்மபுரி கடைவீதியில், பூஜை பொருட்கள், தேங்காய், வாழைப்பழம், பூ மாலை, பலசரக்கு கடை உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. தற்போது, ஆவணி மாதத்தில் திருமணம், காது குத்து, புதுமனை புகுதல் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை மக்கள் அதிகளவில் நடத்தி வருகின்றனர். இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் சுப முகூர்த்தம் என்பதால், கணபதி பூஜை, வாஸ்து பூஜை, திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, பூஜை பொருட்கள் மற்றும் பூ மாலைகள் வாங்க நேற்று, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், சின்னசாமி நாயுடு தெரு உள்ளிட்ட வீதிகளில், ஏராளமானோர் குவிந்தனர். இதனால், தர்மபுரி நகரின் பல்வேறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, தர்மபுரி கடைவீதி மற்றும் தேர்நிலையம் பகுதியில் குவிந்த மக்களால், பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad