காட்பாடி அடுத்த வள்ளிமலை முருகன் கோவில் பக்தர்கள் வெளியிலிருந்தே காவடி செலுத்தி வழிபாடு
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு பிறப்பித்த நிலையில் கோவில்கள் கூட மூடப்பட்டுள்ள நிலையில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு திரளான முருக பக்தர்கள் காவடி ஏந்தி வெற்றி வேல் முருகருக்கு அரோகரா என்று கோஷமிட்டு வள்ளிமலை முருகன் கோவில் மூடப்பட்டுள்ளதால் வெளியிலேயே காவடி செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். வருகின்ற பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றியும் முகவசம் அணிந்தும் வந்தனர்.காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..
எமது செய்தியாளர் : ஆர்.ஜெ. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை