கோவில்பட்டி அருகே ஊருக்குள் வந்த பெண் புள்ளி மான் மீட்பு
கோவில்பட்டி அருகே ஊருக்குள் வந்த பெண் புள்ளிமானை நாய்களிடம் இருந்து காப்பாற்றி வனத்துறையிடம் அப்பகுதி பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
கோவில்பட்டியையடுத்த துறையூர் கிராமத்துக்குள் சுமார் 2 வயது உள்ள பெண் புள்ளிமான் குருமலை காப்புக்காட்டில் இருந்து ஊருக்குள் வந்துவிட்டதாம். இதைக் கண்ட சுமார் 5-க்கும் மேற்பட்ட நாய்கள் அந்த புள்ளி மானை விரட்டி கடித்ததாம். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் நாயை விரட்டிவிட்டு, புள்ளிமானை மீட்டனர். பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து வனச்சரகர் சிவராம் உத்தரவின் பேரில், வனக்காப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வேட்டை தடுப்பு காப்பாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பெண் புள்ளிமானை மீட்டு குருமலை காப்புக்காட்டுக்குள் விட்டனர்.
கருத்துகள் இல்லை