ஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..
தெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
கடந்த 2009ம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் குடும்பத்தை சேர்ந்த ஆண்களே பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதன்பிறகு கடந்த 2010ம் ஆண்டு கணவர் தன்னை விவகாரத்து செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தெலங்கானா மாநில முதல்வர் மகளின் முன்னாள் உதவியாளர், வழக்கறிஞர்கள், திரை உலகினர் உட்பட பலர் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நிர்வாணமாக வீடியோக்களை எடுத்து, அந்த வீடியாக்களை அவர்களின் நண்பர்களுக்கு செல்போன் மூலமாக அனுப்பினார்கள்.
அவர்களையும் வரவழைத்து தன்னை வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகாரில் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் தன்னை இதுபோல், 143 பேர் பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்துவிட்டார்கள் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
143 பேரில் 139 பேரின் பெயர்களை பட்டியலிட்ட இளம்பெண், 4 பேரை தனக்கு அடையாளம் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட பஞ்சகுட்டா போலீசார், 42 பக்கத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கருத்துகள் இல்லை