Header Ads

  • சற்று முன்

    கொரோனா வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றானது புதுச்சேரி

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த மே மாதம் இறுதி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 300க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143ஆக உயர்ந்து, இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக பதிவாகியுள்ளது.


    புதுச்சேரியில் கடந்த 10 நாட்களில் மொத்தமாக 3,774 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் போதிய படுகை வசதியில்லாததால் 55.84 சதவீதம் நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 4 நாட்களில் 29 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

    கடத்த சில வாரங்களாகப் புதுச்சேரியில் கோவிட் தொற்றால் பாதிக்கபட்டர்வகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி வருகிறது. தொற்றின் பாதிப்பு 14 நாட்களில் இரண்டு மடங்காக உயர்கிறது. இது நாட்டின் மிகவும் வேகமான ஒன்றாகும் என்று கூறுகிறார் ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரியில் தீவிர தொற்று பரவலின் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகளின் தேவை பல மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா சிகிச்சைக்காக இருந்த 200 படுக்கைகள் 325 ஆகா உயர்த்தப்பட்டுள்ளது.நோய்த் தொற்று அதிகரித்து அதிகரித்து வரும் சூழலில், அதற்குத் தேவையான பிராண வாயு மற்றும் உயர் தீவிர சிகிச்சை அதிக அளவில் தற்போது தேவைப்படுகிறது," என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் மருத்துவ நிர்வாகத்திற்கு பல்வேறு சவால்கள் எழுந்துள்ளதாகக் கூறும் இயக்குநர், பல்வேறு தரப்பு நோயாளிகளின் உயர் மருத்துவச் சிகிச்சைகளுக்காக எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் வரக்கூடிய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பொழுது, மிக அதிக அளவிலான மருத்துவ பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறினார்.


    "கடந்த ஐந்து மாதங்களில் ஜிப்மர் மருத்துவமனையில் 233 மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் 243 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ பணியாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்," என்று ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    இதனால் ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிறப்புச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் இல்லாமல் சேவை நின்று போகும் சூழ்நிலை உருவாகும் அபாயம் உள்ளது என்று அவர் கூறுகிறார்.

    தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரி மாநிலத்தில் 50,000 பேருக்கும் அதிகமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad