திருவாடானை அருகே மணல் லாரி விரட்டிப் பிடித்த துணை தாசில்தார்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தினையத்தூரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியில் நீர் வடிந்து கொண்டே சென்று கொண்டிருந்ததை திருவாடானை மண்டல துணை தாசில்தார் சேதுராமன் கவனித்துள்ளார். அதனை தொடர்ந்து வாகனத்தை விரட்டி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ஆற்று மணல் திருடி வந்தது தெரியவந்தது. வேறு எவ்வித அரசு அனுமதியும் இல்லை இதுகுறித்து கேட்க வண்டியின் ஓட்டுநரை பார்த்தபோது அவர் இறங்கி தப்பி தலைமறைவாகி விட்டார் உடன் திருவாடனை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்து அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிரைவரை தேடி வருகிறார்கள் ஆற்று மணலுடன் லாரியை கைப்பற்றி நிலையம் கொண்டு வந்தனர்..
கருத்துகள் இல்லை