Header Ads

  • சற்று முன்

    முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு


    கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதத்திற்கு மேலாக உலகமே செய்வது தெரியாமல் 5 கட்ட ஊரடங்கு பிறப்பித்து இருந்த சூழலில் தற்போது சிற்சில தளர்வுகள் காரணமாக தமிழகம் இயங்கி வருகிறது.தற்போது சென்னையில் மிக அத்தியாவசியமான டாஸ்மாக் வெற்றிகரமாக திறந்து விற்பனையும் நடைபெற்று வருகிறது. சமூக இடைவெளி காரணமாக பொது போக்குவரத்து, கேளிக்கை கூடங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் மதுப்பான கடைகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை செய்யப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தி பொது இடங்களில் வைக்க தடை ஆனால் தனியார் இல்லங்களில் களிமண் பிள்ளையார் விற்பனைக்கு அனுமதி ! இன்று காலை முதல் முக்கிய தெருக்களின் சந்திப்புகளில் களிமண் விற்பனை அமோகம். சமூக இடைவெளியும் கிடையாது.போலீஸ் பாதுகாப்பும் கிடையாது. பொது மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது அதே நேரத்தில் குடிமகன்களுக்கு போலீஸ் பாதுகாப்பு. டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பினால் அரசு பொது மக்களிடையே வெறுப்பினை தான் சம்பாதித்து வருகிறது. கொரோனா தொற்றால் மக்கள் மிகவும் சிரமப்படுகிற நேரத்தில் டாஸ்மாக் மதுபானா கடைகள் தேவையா ? எலி போன்களில் கருவாடு வைத்து எலிகளை பிடிப்பது போல அரசு ஆயிரம் ரூபாய் என இருமுறை அரசு வழங்கியது. வழங்கிய பணத்திற்கு இரட்டிப்பாக டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பினால் கோடி கோடியாய் வருமானத்தை பார்க்கிறது.

    இதன் பிறகு பொது போக்குவரத்து இயங்கினால் என்ன தவறு . இ - பாஸ் எதற்கு என்று பொது மக்கள் சிந்திக்க வைக்கிறது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad