• சற்று முன்

    திருப்பத்தூரில் அத்துமீறி வைக்கப்பட்ட 5 விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


    திருப்பத்தூரில் அத்துமீறி வைக்கப்பட்ட 5 விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தற்போது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழ கொண்டாடுவதையும் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கப்படவில்லை இதன் காரணமாக விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பொதுமக்கள் அவரவர் வீடுகளிலிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது 


    .மேலும் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ , சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தால் கடுமையாகக் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரம் கௌதம்பேட்டை, பெரியார் நகர்,உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த 5 விநாயகர் சிலைகளை திருப்பத்தூர் நகர காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad