வேலூர் கோட்டை அருகே கோட்டை கொத்தளத்தில் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தேசிய கொடி ஏற்றினார்
வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது வேலூர் கோட்டை அருகே உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மாலை அணிவித்தார் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் இதனையடுத்து நேதாஜி ஸ்டேடியத்தில் தேசிய கொடி ஏற்றினார்
தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் வந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி சிறைத்துறை டி.ஐ.ஜி.ஜெயபாரதி எஸ்.பி. பிரவேஷ்குமார் டி.ஆர்.ஓ. பார்த்திபன் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் சப் கலெக்டர் கணேஷ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
தடுப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது தொடர்ந்து தாட்கோ மூலம் 11 லட்சத்து 20 ஆயிரத்து 795 ரூபாய்க்கும் 3 லட்சத்து 60 ஆயிரத்து 85 மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை