Header Ads

  • சற்று முன்

    யாருக்கு முதல்வர் வேட்பாளர் OPS / EPS

    2021ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பத்திற்கு   விடைதேடி, சுதந்திர தின கொடியேற்றத்திற்குப் பிறகு, தமிழக அதிமுக அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவரவர் இல்லத்தில்  மாறி மாறி  ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத்தகவல் கசிந்துள்ளது.  .துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓபிஎஸ் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சுவரொட்டிகள் குறித்து சமூகவலைத்தளங்களில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த போட்டி தொடங்கிவிட்டதாகக் கருத்துகள் வெளியாகின. அந்த சுவரொட்டிகள் குறித்த தகவல்கள் பரவியதும் கிழிக்கப்பட்டன.

    சுதந்திர தின கொடியேற்றத்திற்குப் பின்னர், அதிமுக அமைச்சர்கள் முதலில் தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் பேசினர். பின்னர், துணை முதல்வர் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. மீண்டும் அணிவகுத்து, முதல்வர் இல்லத்திற்குச் சென்றனர். பத்திரிகையாளர்களிடம் கருத்து எதுவும் தெரிவிக்காத மூத்த அமைச்சர்கள், விரைவில் தகவல்கள் வெளியாகும் என்றுமட்டும் தெரிவித்தனர்.


    அதிமுக அமைச்சர்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இல்லத்திலும் ஆலோசனை நடத்துவதன் மூலம், இருவர் மத்தியில் குழப்பம் நீடிப்பதாக தெரிகிறது என்கின்றனர் கட்சி வட்டாரங்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad