வாலாஜா அடுத்த வன்னிவேடு பகுதியில் அகத்தீஸ்வரர் கோவில் முன்பு பிறந்து ஒரு மாதம் ஆன ஆண் குழந்தை மீட்பு
வாலாஜா அடுத்த வன்னிவேடு பகுதியில் பாலாற்றங்கரையோரம் அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இன்று காலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அப்போது, கோவிலுக்குள் ஒரு குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், சென்று பார்த்த போது பிறந்து 2 மாதங்கள் ஆன நிலையில் அழகிய ஆண் குழந்தை ஒன்று தலையில் குல்லா, ஆடைகள் அணிந்துபடுத்திருந்தது. மேலும், கண்மை பூசியும் அக்குழந்தை அழகு படுத்தப்பட்டிருந்தது. இன்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால் கோவிலில் அனாதையாக கிடந்த அந்த அழகிய ஆண்குழந்தையை பார்த்தவுடன் கோவிலுக்கு வந்த பெண்கள் உணர்ச்சிவசப்பட்டனர். இப்படியொரு குழந்தையை தூக்கி வீசி எறிய எப்படி மனம் வந்தது என்றுவீசிச் சென்றவர்களை பெண்கள் திட்டித்தீர்த்தனர். இதனையடுத்து வாலாஜாபேட்டை போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கு வந்த போலீசார் குழந்தையை
வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், குழந்தையை கோவிலில் வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து வாலாஜா நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை