கிரிக்கெட் தொடரை நடத்த அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார் .
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் திருவிழாவை வரவேற்கத் தயாராக உள்ளனர். அத்துடன் கொரோனா பாதிப்பில் வீட்டில் இருந்த வீரர்கள், இப்போது ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த முறை கோப்பை வெல்ல வேண்டும் என்பதில் அனைத்து அணிகளுமே தீவிரமாக உள்ளன. அத்துடன் தங்கள் அணியை கட்டமைப்பதிலும் அனைத்து அணியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனிடையே வெளிநாடுகளில் கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகங்களின் அனுமதி தேவை. இதில் விளையாட்டுத் துறை அமைச்சகத்திடமிருந்து ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : பஷீர்
கருத்துகள் இல்லை