கிராமத் தலைவரை காரில் கடத்தல், கடத்தி சென்றவருக்கு பலத்த அடி, செருப்பு காலால் மிதி குற்றசம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 8 பேர் மீது மீது வழக்கு
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினம் அருகே தாமோதரன்பட்டினம் பஸ் ஸ்டாப்ல் பாசிபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் காலனி இடும்பன் மகன் பழனியாண்டி என்பவர் நின்றுகொண்டிருந்துள்ளார். இவர் பாசிப்பட்டினம் கிராம துணை தலைவராக இருந்து வருகிறார். இவர் பதினெட்டாம் தேதி மாலை 3 மணி அளவில் டாடா ஏஸ் வாகனத்தில் ஏறியபோது திடீரென வந்து காரை நிறுத்தியவர்கள் வழிமறித்து வலுக்கட்டாயமாக தூக்கி காருக்குள் போட்டு கடத்திச்சென்று காருக்குள் வைத்து அடித்ததோடு மட்டுமல்லாமல் தேவகோட்டை ரோட்டில் சென்று தகாத வார்த்தைகளால் பேசி திட்டி அடித்து கத்தினால குத்தி விடுவோம் என கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் காரை விருதன்வயல கண்மாய்க்குள் காருடன் கொண்டு போய் அங்கு காரில்வரை இழுத்து கீழே போட்டு அனைவரும் சேர்ந்து அடித்து, செருப்பு காலால் மிதித்து பழனியாண்டி யார் நீங்கள் எதற்காக என்னை கடத்தி வந்துள்ளீர்கள என கேட்டதற்கு இராமநாதபுரம் மீன்வளத் துறை மூலமாக வழங்கப்படும் தனிநபர் கடனுக்கு நாங்கள் செல்லும் நபருக்கு தான் நீ கையெழுத்து போட வேண்டும் என்றும் மிரட்டி அடித்ததில் இவருடைய கதறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் செருப்புக் காலால் மிதித்தனர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து கிராம மக்கள் வந்தவுடன் தப்பி ஓடிவிட்டனர்
இதுபற்றி எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் நினைத்தார் விசாரித்ததில் பாசிப்பட்டணம் நூர்தீன் மகன் காதர்கணி, அகமது கனி மகன் நூருல் அமீன், காதர் சேக்காதி மகன் பரக்கத் அலி, மைதீன் பிச்சை பீர்முகமது, துரைசாமி மகன் வெள்ளைச்சாமி, மாரிமுத்து மகன் நாகேந்திரன், சாகுல் ஹமீது மகன் முகம்மது மைதீன் என்பது தெரியவந்து இவர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடி கடத்திச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி செருப்பு காலால் மிதித்து கொலை மிரட்டல் கொடுத்த சம்பந்தமாக மொத்தம் எட்டு பிரிவின்கீழ் வழக்கு செய்த எஸ்.பி.பட்டிணம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி விசாரித்து வருகிறார்கள்
கருத்துகள் இல்லை