• சற்று முன்

    74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை நடை பெற்றது

     

    நாளை (15.08.2020) நடைபெறவுள்ள 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தூத்துக்குடி விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை.


     *தூத்துக்குடி  மாவட்டத்தில் நாளை (15.08.2020) கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து நடைபெறவுள்ள நாட்டின் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    *தூத்துக்குடி விமான நிலையம், ரயில்வே நிலையம், சுதந்திர தின விழா நடைபெறும் தருவை விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் தீவர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    *தூத்துக்குடி விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு  உதவி ஆய்வாளர்கள் திரு. சுகுமார் மற்றும் திரு. ஆறுமுகநயினார் ஆகியோர் தலைமையிலும், அதே போன்று தருவை மைதானத்தில் உதவி ஆய்வாளர் திரு. ஸ்ரீகுமார், ஆதிலிங்கம் மற்றும் வேலாயுத பெருமாள் ஆகியோர் தலைமையிலும், திருச்செந்தூர் அருள்மிக சுப்பிரமணிய சாமி கோவிலில் உதவி ஆய்வாளர்கள் திரு. காமாட்சி சுந்தரம், சின்னத்துரை ஆகியோர் தலைமையிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad