Header Ads

  • சற்று முன்

    இராணிப்பேட்டை மாவட்டத்தில் குடிமராமத்துபணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

     

    இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2020 -21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டமான குடிமராமத்து  திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை யின் மூலம் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

    இராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை யின் மூலம் மொத்தம் 369 ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின்   திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் இதுவரை இராணிப்பேட்டை மாவட்டத்தில் 12.60 கோடியில் 71 ஏரிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் 9038.87 ஹெக்டேர் விளை நிலங்களுக்கு பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2020- 21 ஆம்  நிதிஆண்டில் ரூபாய் 9.15 கோடி மதிப்பீட்டில் 24 ஏரிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் அந்தந்த ஏரிகளின் ஆயக்கட்டு தாரர் விவசாய சங்கங்களின் மூலம் பணி மேற்கொள்ளப் படுகிறது. இத் திட்டத்தின் கீழ் 24 ஏரிகளின் 42.13 கி.மீ. கரைகளை பலப்படுத்தவும், 96.23 கிலோமீட்டர் கால்வாய்களை தூர் வாரவும், 27 மதகுகள் பழுது பார்க்கவும், மற்றும் 16 மதகுகள் மறுகட்டுமானம் மேற்கொள்ளவும், 27     கலிங்குகள் பழுது பார்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 3163.37 ஹெக்டேர் விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

    மேலும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு  தாலுகாவில் உள்ள புதுப்பாடி ஏரி 65 லட்சம் மதிப்பீட்டிலும், சோளிங்கர் தாலுகாவில் உள்ள ஒழுகுர் ஏரி 54 லட்சம் மதிப்பீட்டிலும், புலிவலம் ஏரி 27 லட்சம் மதிப்பீட்டிலும், போலி பாக்கம் ஏரி 38 லட்சம் மதிப்பீட்டிலும், குன்னத்தூர் 45.75 லட்சம் மதிப்பீட்டிலும்  குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த ஏரிகளின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும்              கலிங்குகள் பழுது பார்க்கும் பணிகள் கால்வாய் மற்றும் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் நிர்ணயம் செய்து எல்லைக் கற்கள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ராணிப்பேட்டை மாவட்டத்தில்  முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ்  பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத் துறையின் மூலம்  5 ஏரிகளை நேரில் சென்று குடிமராமத்து பணிகள் நடைபெற்று வரும் இடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

    செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad