கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் தங்க செயின் பறிப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாசில்தார்நகரை சேர்ந்தவர் சின்னராசு இவரது மனைவி கடலி(48) இன்று காலை இவர் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி வரும்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி கழுத்தில் இருந்த 10 பவுன் செயினை பறித்துச் சென்று தப்பி ஓடிவிட்டனர் இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் கொண்டுவந்து விசாரணை நடத்தினர் மோப்பநாய் சிறிது தூரம் ஓடி நின்று அப்பகுதியில் பல்வேறு இடங்களில்
விசாரணை மேற்கொண்டனர் இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஐய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் மேலும் தப்பியோடிய மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர். கோவில்பட்டி பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் தங்க செயின் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை