சென்னை சூளை இந்து ஒற்றுமை கழக மேல்நிலை பள்ளியில் 74வது சுதந்திர தின நிகழ்வு நடை பெற்றது.
சென்னை சூளை இந்து ஒற்றுமை கழக மேல்நிலை பள்ளியில் 74வது சுதந்திர தின நிகழ்வு நடை பெற்றது. அப் பள்ளியின் நிறுவனர் சிங்கரவேலர் அவர்களின் திருவுருவ படத்திற்கு பள்ளியின் செயற்குழு தலைவர் நாகேஸ்வர ராவ் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செயற்குழு பொது செயலாளர் D.C. சேகர் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றினார். செயற்குழு உறுப்பினர்களுக்கு தலைவர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர், மேலும் விக்டோபாய் பாலசுப்பிரமணி அறக்கட்டளை சார்பாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவனுக்கு 2,500 இரண்டாவது அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு 1,500 ரொக்க பரிசுகளை வழங்கினார். மேலும் பள்ளியில் பயிலும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள இரண்டு மாணவர்களுக்கு தலா 5,000 வழங்கினார்.
சத்துணவு ஊழியர்கள்,துப்புரவு ஊழியர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் தலா 1,000 வீதம் 5 ஊழியர்களுக்கு வழங்கினார்.இந்த நிகழ்வில் தலைமையாசிரியர்கள், பள்ளியாசிரியர்கள், மாணவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை