வாலாஜாD2 காவல் நிலையத்துக்கு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கிருமிநாசினி இயந்திரத்தை துவங்கி வைத்தார்
தளபதி பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் இயக்கம் மாநில பொருப்பாளர் புஸ்ஸி ஆனந்த் Ex,MLA,. அவர்களின் ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் தமிழகத்தில் முதல்முறையாக மக்கள் இயக்கம் சார்பாக வாலாஜாD2 காவல் நிலையத்துக்கு ராணிப்பேட்டை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பூக்கடை மோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் வினோத் தலைமையில் வாலாஜா காவல் ஆய்வாளர் பாலு முன்னிலையில் கிருமிநாசினி இயந்திரம் 13,000, மதிப்பில் வழங்கப்பட்டது.
மேலும் காவல் ஆய்வாளர் பாலு அவர்கள் கிருமிநாசினி இயந்திரத்தை துவங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் காந்திராஜ் மாவட்ட பொருளாளர் ராம்ராஜ் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜில்லா காந்தி மாவட்ட இளைஞரணி பொருளாளர் ராஜசேகர் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் எழிலரசன் மற்றும் தளபதி மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
எமது செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை