ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய இணையதளம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை தனிமாவட்டமாக உதயமானது.எனவே, மாவட்டத்தில் உள்ள பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க மாவட்டத்திற்கென்று பிரத்தியேக இணையதளம் ஒன்று தேவைப்பட்டது. இந்நிலையில், புதிய இணையதளத்தை இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார். பொதுமக்கள் அனைவரும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி நலத்திட்டங்களை குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் ஏராளமான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை