பழனி டி.எஸ்.பி. அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
பழனி டி.எஸ்.பி. அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் வந்த ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீக்குளிக்க முயன்றவரை போலீசார் தடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது நெய்க்காரப்பட்டி. பகுதியில் திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக இருப்பவர் அம்ஜத் உசேன். இவரது மனைவி தஸ்லிமா. இவர்களுக்கு நான்கு வயதில் இசாஜ்அகமது, ஒன்றரை வயதில் இத்ரிஸ் ஆகிய இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. மேலும் உடுமலையில் உள்ள காவல் நிலையத்தில் அம்ஜத் உசேன் மீதும், பழனி தாலுகா காவல் நிலையத்தில் தஸ்லிமா மீதும் பரஸ்பரம் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி தாலுகா காவல் நிலையத்தில் ஒரு சார்பாக நடப்பதாக காவல்துறையினர் மீது புகார் தெரிவிக்க அம்ஜத்உசேன் தனது இரண்டு குழந்தைகளுடன் பழனி டி.எஸ்.பி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென பையில் வைத்திருந்த பெட்ரோலை இரு குழந்தைகள் மீதும் ஊற்றி, தன் மீதும் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு நின்றிருந்த பத்திரிகையாளர்கள் அம்ஜத்அலி மற்றும் இருகுழந்தைகளையும் காப்பாற்ற முயற்சித்தனர். இதனால் அங்கு சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் குழந்தைகளை மீட்டனர். இதுகுறித்து அம்ஜத் உசேனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் முழு காண்ணொளியை nms today youtube chennal பார்க்கவும்
செய்தியாளர் பழனி சரவணக்குமார்
கருத்துகள் இல்லை