ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று அவர்களே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப் படுகின்றன என்றால் சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிப்பதில்லை இதனால் நோய் தொற்று உள்ளவர்கள் தங்களின் பரிசோதனை முடிவு நிலை என்ன என்று நினைத்து பெரும் அச்சத்திற்கு ஆளாகி விடுகின்றனர் எனவே உள்ளவர்களுக்கும் தகவலை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது
இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள் ஆய்வு கூட்ட அறிக்கை பெறப்பட்ட உடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உடனடியாக பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என்ற விவரத்தை குறுஞ்செய்தி மூலமாக செல்போனுக்கு அளிக்கப்படுவது மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்ட சளி மாதிரி சோதனைகள் முடிவுகள் தரப்படுவதை தொடர்ந்து அவர் கைபேசியில் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும் இவ்வாறு தெரிவித்துள்ளார்
எமது செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை