• சற்று முன்

    வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி,(வருவாய் தீர்வாய அலுவலர்) அவர்கள் தலைமையில் (ஜமாபந்தி) தொடங்கியது


    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா அலுவலகத்தில் (15.7.2020) அன்று  1429 ஆம் பசலி ஆண்டிற்   கான வருவாய் தீர்வாயம்  மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி,(வருவாய் தீர்வாய அலுவலர்) அவர்கள் தலைமையில் (ஜமாபந்தி) தொடங்கியது.  இன்று (17.7.2020) மூன்றாவது நாளாக வாலாஜா, ராணிப்பேட்டை உள்வட்டம் 12 வருவாய் கிராமங்களின் நிலவரி கணக்கு தணிக்கை களை ஆட்சியர் அவர்கள்ஆய்வு செய்தார். 


    வருவாய் தீர்வாயத்தில் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட மனுக்களின் கோரிக்கைகள், வீட்டுமனை பட்டா மாற்றம்,முதியோர் உதவித்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றம், மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு வீட்டு மனைகள் வழங்கவேண்டும் எனவும், நஞ்சை, புஞ்சையில் சாகுபடி செய்பவர்களை கணக்கிட்டு E அடங்கல் பதிவேற்றம் விரைவில் செய்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். உடன் மாவட்ட வழங்கல் அலுவலர் இளவரசி, துணை ஆட்சியர்  தாரகேஸ்வரி, ஜமாபந்தி மேனேஜர் பாபு ,வாலாஜா வட்டாட்சியர்  பாக்கியநாதன் ,  நில அளவை ஆய்வாளர் சேகரன், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் உடன் இருந்தார்கள் 


    எமது செய்தியாளர் : சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad