Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.



    தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தினந்தோறும் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினரை பகுதி பகுதியாக பிரித்து, அனைத்து காவல் நிலையங்களிலிருந்தும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் உட்பட சுமார் 50 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க உத்தரவிட்டுள்ளார். 



    அதன்படி இன்று (09.07.2020) மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் காவல்துறை ஆளினர்களிடம், காவல்துறையினர் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவேண்டும், சட்டத்திற்குட்பட்டே காவல் நிலைய பணிகளை மேற்கொள்ள வேண்டும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு கால தாமதமில்லாமல் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கில் எதிரிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும், காவல்துறையினர் எவ்வித மன அழுத்தமும் இல்லாமல் பணியாற்றுவதற்கு என்னென்ன வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டும், தற்போதை கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில், அது பாதிக்காமல் இருப்பதற்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது போன்றவற்றையும் எடுத்துரைத்தார். 

    இப்பயிற்சியில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், மன நல மருத்துவர் திரு. சிவசைலம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad