Header Ads

  • சற்று முன்

    உணவகங்கள், ஆன்லைன் உணவு நிறுவனங்கள், அழகு நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடு .. சென்னை மாநகராட்சி அறிவிப்பு



    சென்னையில் உள்ள உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவலை குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான இயல்பு நிலைக்கு சென்னை திரும்பி வருகிறது. கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.



    இந்நிலையில் உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னையில் கூட்டம் 
    இந்நிலையில் அரசு வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிப்பது தொடர்பாக உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ், தலைமையில் இன்று (09.07.2020) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.




    ஆன்லைன் உணவு 
    மேலும், கோவிட்-19 தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் வழிகாட்டுதல்கள்/அறிவுரைகளை அனைத்து உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது



    கட்டாயம் முகக்கவசம் 
    இந்தக் கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் கூறுகையில், 'அனைத்து உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட அனைவரும் ஆறு அடி இடைவெளியுடன் கூடிய சமூக இடைவெளியினைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad